“வடக்கின் நுழைவாயில் சர்தேச வர்த்தக சந்தை” இன்று யாழில் ஆரம்பமாகியது!!

வடக்கின் நுழைவாயில் சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம்(03/03/2023) வெள்ளிக்கிழமை யாழ் நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை இன்றைய தினம்(03/03/2023) வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம்(05/03/2023) ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா திறந்து வைத்தார்.

கொழும்பின் பிரபல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களையும் இணைத்து யாழ்ப்பாணத்தில் இந்த சந்தை நடைபெறுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தெற்கு தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கும் தொழில்நுட்பரீதியில் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பல வருடகாலமாக,

வடக்கின் கைத்தொழில் துறை வளர்ச்சி மற்றும் சந்தைவாய்ப்பில் இருந்த பாரிய இடைவெளிகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் கண்காட்சிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.

250 கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்படவுள்ள நிலையில் கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

சுமார் 45 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

பாடசாலை சீருடையுடன் வருகைதரும் மாணவர்கள் குறித்த கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடுட முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *