க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் வெளியிடும் திகதி அறிவிப்பு!!
இந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெற்றது.
அதற்காக,
517,486 பேர் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 407,129 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.