தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட அதிகரிப்பு
உலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,745 டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த மாதத்தில் 0.72 வீதத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, நேற்று முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,845 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இந்த காலப் பகுதியில் தங்கத்தின் விலை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.