வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை….. மாணவர்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!
பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி,
அதிக விலைக்கு பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்ககையில்,
“பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களின் விலையை மாற்ற வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள போதிலும், பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்.
இதேவேளை,
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வர்த்தகர்கள் ஏற்கனவே பதுளை பிரதேசத்தில் இருந்து பிடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள்
அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பெற்றோரிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்
அதனை அவதானித்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொள்ளவுள்ளோம்.”என தெரிவித்திருந்தார்.