வீதியோர வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….. எந்தவொரு நபரும் விற்பனை செய்ய முடியும்!!
எந்தவொரு நபரும் தங்களது உற்பத்தி பொருட்களை வீதியோரங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை குறித்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்களின் அறிவித்தலின்படி,
போக்குவரத்திற்கு இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.