நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை உக்ரைன் மக்களுக்கு அனுப்பும் கூகுளின் புதிய அப்டேட்!!
உக்ரைனிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றை வழங்கியுள்ளது.
இதன்படி,
அண்ட்ரொய்ட்(Android) பயனாளர்களுக்கு வான்வெளித் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் சேவையை கூகுள் ஆரம்பித்துள்ளது.
பூகம்பங்கள் குறித்த எச்சரிக்கைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரைனில் நடைபெறவுள்ள விமான தாக்குதல்கள் குறித்த எச்சரிகைகளை அனுப்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கைகளை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர்.
இதனால்,
உக்ரைன் அரசுடன் இணைந்து இந்த சேவையை தொடங்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.