பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு கையெழுத்திட்ட கோட்டாபய!!

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் ஜூலை 13 என திகதி குறிப்பிட்டு நேற்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் எனவும் தெரியவந்துள்ளது.

அரச தலைவரின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அவர் அதை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று மதியம் கோட்டாபய  நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என செய்திகள் வெளியானது.

எனினும்,

இந்த அறிக்கையை கோட்டாபயவுக்கு நெருக்கமான மூத்த வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

இராணுவனத்தின் பூரண கட்டுப்பாட்டில் விமான நிலையம் ஒன்றில் கோட்டபாய வைக்கப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் உள்ள மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பதவி விலகல் கடிதத்தில் கோட்டபாய  கையெழுத்திட்டுள்ளார் என்ற தகவலை அனைவரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *