அரச நிறுவனத்துக்கு சொந்தமான சொந்தமான பஜிரோவை அடித்து தூக்கிய தனியார் பஸ்….. வேம்படிச்சந்தியில் சம்பவம்!!
யாழ்ப்பாணம் வேம்படி வீதி முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பேருந்தும் அரச திணைக்களம் ஒன்றிற்குச் சொந்தமான பஜிரோவும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்.மடம் வீதியூடாக வந்து கொண்ருந்த விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான பஜிரோ வேகமாக திருப்புவதற்கு முயற்சித்த போது கச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மோதித்தள்ளியுள்ளது.
இருப்பினும் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
எனினும், விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான பஜிரோ சாரதி தலை மற்றும் கை, கால்களில் படுகாயமடைந்துள்ளார். மேலும் அதில் பயணித்த விவசாயத் திணைக்கள அதிகாரிகள் 3பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பாக தெரியப்படுத்தும் நோக்கில் பேருந்தின் சாரதி யாழ்.காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த போது அழைப்பினை ஏற்கவில்லை எனவும் காயமடைந்தவர்களை முச்சக்கர வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் சம்பவத்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,m
இதே இடத்தில் ஒரு வாரத்தில் மாத்திரம் மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.