இலத்திரனியல் சேவையாக மாற்றியமைக்கப்படவுள்ளது இலங்கையின் அரச சேவைகள்!!

இலங்கையின் அரச சேவையை இலத்திரனியல் சேவையாக மாற்றி அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் புதிய செயலாளராகப் பதவியேற்றுள்ள பிரியந்த மாயாதுன்னே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடதாசி தாள் பாவனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தின் சேவைகளை இலத்திரனியல் மயப்படுத்துவது அத்தியாவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதுடன்,

அத்தியாசியமில்லாத நாட்களில் அரச ஊழியர்கள் சீருடைகள் இன்றி விரும்பிய உடையணிந்து வரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,

வீட்டுத் தோட்டங்களில் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்பட்டு எதிர்வரக் கூடிய பஞ்சம் மற்றும் பட்டினி என்பவற்றை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்தும் செயற்பாடுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும்,

பட்டதாரி உத்தியோகத்தர்களை இந்தச் செயற்பாட்டின் போது பயன்படுத்திக் கொள்ள உத்தேசித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *