ட்ரம்பின் கிரீன்லாந்து அச்சுறுத்தலுக்கு தக்க பதிலடியாக 93 பில்லியன் யூரோ அளவிற்கு வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
மற்றும் அமெரிக்க நிறுவனங்களை ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் சந்தையில் இருந்து கட்டுப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்துள்ளது
கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான தனது நடவடிக்கைகளை எதிர்த்த நேட்டோ கூட்டாலிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட்ரம்ப் விடுத்த மிரட்டல்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த நகர்வு
மட்டுமின்றி,இந்தவாரம் டாவோஸில்நடைபெறும்உலகப்பொருளாதார மன்றத்தில் டிரம்புடன் நடக்கவிருக்கும் முக்கிய சந்திப்புகளில் ஐரோப்பிய தலைவர்களுக்கு செல்வாக்கு அளிக்கும் நோக்கில் ,இந்த பதிலடி நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக , கிரீன்லாந்தை சொந்தமாக்கும் திட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பிரித்தானியா உட்பட 8 ஐரோப்பிய நாடுகள் மீது டொனல்ட்ட்ரம்ப் சிறப்பு வரி விதித்துள்ளார்
மற்றும் டென்மார்க் ,நோர்வே ,சுவீடன்,பிரான்ஸ்,ஜெர்மெனி, நெதர்லாந்து,பின்லாந்து,மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் மீது 10 சதவீத வரியும் ஜூன் 1 திகதிக்கு முன்னர் கிரீன்லாந்து விவகாரத்தில் இந்த நாடுகள் அமெரிக்கவிற்கு சாதகமான முடிவை எட்ட தவறினால் 25 சதவீத வரியும் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்,
இந்த வரி விதிப்பிற்கு சில நாடுகள் தொடர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. தற்போது ட்ரம்பின் அச்சுறுத்தலிற்கு பதிலடியாக வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது சுங்க வரிகள் என்பவை ஒரு நாடு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் ஆகும்,.
