துப்பாக்கிச் சூட்டால் குறைந்தது 10 பேர் கொலை!!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் Buffalo நகரிலுள்ள 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் அங்காடிக்குள் நுழைந்த இளைஞர், கையடக்கத் தொலைபேசி கெமரா ஊடாக ஒன்லைனில் தாக்குதலை நேரலையை ஔிபரப்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வௌியிட்டுள்ளார்.