சந்தையில் ஒரு முட்டையின் சில்லறை விலை திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஒரு முட்டை 40 முதல் 50 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறியப்படுகிறது.
இதனுடன், பல்பொருள் விற்பனை நிலையங்களில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதியின் விலை 470 ரூபாயிலிருந்து 550 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர், சீரான வானிலை நிலவி வந்த காலத்தில், ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டித்வா புயலால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பல கோழிப்பண்ணைகள் சேதமடைந்ததால் உற்பத்தி குறைந்து, சந்தையில் முட்டை பற்றாக்குறை உருவானதே இவ்விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என முட்டை உற்பத்தியாளர்கள் விளக்கியுள்ளனர்.
