கோர விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்! பயணித்த அனைவரும் பலி – அமெரிக்காவில் துயரம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகொப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது.
சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகொப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்