அச்சுவேலி பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை!!
அச்சுவேலி பத்தை மேனி பகுதியில் இன்று(10/12/2022) காலை ஊனமுற்றவர்களுக்கு நிதி சேகரிப்பதாக சென்ற ஒருவர் பத்தைமேனி பகுதியிலுள்ள வீடுகளுக்கு சென்று நிதி சேகரித்துள்ளார்.
அதேபோல,
முதியவர் வசிக்கும் வீடொன்றுக்கும் குறித்த நபர் சென்ற போது அனுசரித்த முதியவர் 100 ரூபா நிதிப்பங்களிப்பை வழங்கிய போது
இது காணாது சற்று அதிகமாக தாருங்கள் என 500 ரூபா பணத்தினை வாங்கியிருந்தார்.
பின்னர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என கேட்க முதியவர் வீட்டுக்குள்ளே சென்றபோது முதியவரின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை அபகரித்து சென்றுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.