கணவருடன் சண்டை…. பச்சிளம் பிள்ளையை துன்புறுத்தும் தா(நா)ய் – பரபரப்பு காணொளி!!
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துளசி என்ற பெண் தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்பவரை திருமணம் செய்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணிற்கு திருமணமாகி, 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகின்றது.
இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், துளசி, தனது இரண்டு வயது மகனை அடித்து துன்புறுத்துவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழந்தையை அடித்துக்கும் சந்தர்ப்பத்தில், அதனை அவரே தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துகொண்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அடித்து காயமடைந்த குழந்தையை கீழே வீழ்ந்து அடிபட்டதாக தெரிவித்து,புதுச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
குறித்த பெண் குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் காணொளி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.
குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் காணொளியை, கணவர், மனைவியின் கையடக்கத் தொலைபேசியில் அவதானித்துள்ள நிலையில், அது தொடர்பில் சத்தியமங்கலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த பெண் தொடர்பில் விழுப்புரம் பொலிஸார், வழக்கு பதிவு செய்து, தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.