தேவாலயத்தை தாக்கிய இடி மின்னல்- உள்ளேயிருந்த கட்டடப் பணியாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி,மின்னல் தாக்கம் ஏற்பட்டது.
நேற்று வியாழக்கிழமை மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் மதியம் 2.30 மணியளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது.
இதன் போது ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இடி வீழ்ந்ததில் ஆலயத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் , பொது மக்கள் இணைந்து ஆலயத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.