இளைஞர் யுவதிகளுக்கோர் அரிய வாய்ப்பு! நவம்பர் 15 வரை மாத்திரமே
பாவனையில் இல்லாத அரச காணிகளை அல்லது மத்தியதர வகுப்புத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் இருக்கின்ற காணித்துண்டுகளை காணி கோரும் இளம் தொழில் முனைப்பாளர்களுக்கு (45 வயதுக்கு உட்பட்டோர்) நிபந்தனைகளுடன் வழங்க அரசாங்கம் முடிவசெய்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சம் காணித்துண்டுகளை உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பை அழுத்தி விண்ணப்பப் படிவத்தை (தரவிறக்குவதன் மூலம்) பெற்று, பூர்த்தி செய்து – உங்களது பிரதேச செயலகத்தில் கையளிப்பதன் மூலம் உங்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய முடியும்.
இதன் இறுதித் திகதி ஒக்டோபர் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும் நவம்பர் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.