இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை…..அதிரடி அறிவிப்பு விடுத்த உலக வங்கி!!
நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை வகுக்கும் வரையில் தாம் இலங்கைக்கு உதவப்போவதில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.
எனினும் இலங்கையிலுள்ள ஏழ்மையான மக்களுக்கான உதவிகளை தற்போது அதிக கரிசனையுடன் வழங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்குவதற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.