இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படும் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி பெற்ற எந்தவொரு நபருக்கும் இதுவரை கடுமையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
எனினும் தடுப்பூசி பெற்றவர் சிறிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்இதுது பொதுவானவை என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹே மந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போடப்பட்ட எந்தவொரு நபருக்கும் இதுவரை எந்தவொரு தீவிர பக்க விளைவுகளை உருவாக்கவில்லை என்றும் அறிவித்தார்.
இந்த தடுப்பூசியைப் பெற்றதன் விளைவாக காய்ச்சல் அல்லது பிற சிறிய பக்கவிளைவுகள் இருப்பதை கடுமையான பக்க விளைவுகளாக உறுதிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.