உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் – இராணுவத்தளபதி உத்தரவு!!
ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
அந்த வகையில், பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் பல பகுதிகள் முடக்கப்பட்டன.
பதுளை
ஹூலங்கபொல களுத்துறை யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த பிரதான நகரம்
யடதொல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அம்பதென்ன வத்த க்லே பிரதேசம்
மன்னார்
தலைமன்னார் மேற்கு
தலைமன்னார் கிழக்கு
யாழ்ப்பாணம்
கரணவாய்
இரத்தினபுரி
பொத்தகந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நொரகல்ல வத்த வடக்கு பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல – 1 பகுதி
பனவென்ன கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பெல்மடுல்ல வத்த இல – 5 பகுதி
கபுஹெந்தொட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வத்த இல – 5 பகுதி