அத்தியாவசிய பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தி மாடுகளை கடத்த முயன்றவர் கைது!!
வவுனியாவில் பார ஊர்தியில் 14 மாடுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தி மாடுகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதே நெலுக்குளம் பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புளியங்குளத்தில் பாரவூர்தியை இடைமறித்த பொலிஸார், எவ்வித அனுமதியும் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டுள்ளனர்.
சந்தேகநபரான சாரதி கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.