வரலாற்றில் பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா!!
வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா தாக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டம் காரணமாக வரலாற்றில் இம்முறை பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா நடைபெற்றுள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களைக் கொண்டு வசந்த மண்ட பூஜையுடன் ஆரம்பமாகி எம்பெருமானுக்கு உள்வீதித் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது