அயல் வீட்டு பெண்ணை தன்னை இரண்டாவது திருமணம் புரியுமாறு மிரட்டிய 46 வயது இயக்குனர் கைது!!
வீடு புகுந்து இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்படுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தயாரிப்பாளரும், இயக்குனருமான ‘வராகி ராதாகிருஷ்ணன்’ (வயது 46) வசித்து வருகிறார்.
அதே குடியிருப்பில் 31 வயதான இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசிக்கிறார்.
அந்த இளம்பெண் கடந்த 2016-ம் ஆண்டு வராகியிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்னர் அவரது நடவடிக்கை பிடிக்காமல் இளம்பெண் வேலையை விட்டு விலகியதாக தெரிகிறது.
இந்நிலையில்,
ஏற்கனவே திருமணமான வராகி அந்த இளம்பெண்ணிடம் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதற்கிடையேm
நேற்று காலை இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற தயாரிப்பாளர் இளம் பெண்ணிடம் “என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும், “ இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் பொலிஸில் முறைபாடு கொடுத்துள்ளார்.
உடனே வராகி மகளிர் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.