யாழில் விளையாட்டில் மற்றுமொரு குடும்பஸ்தர் உயிரும் பறிபோனது!!
அலைபேசியில் பப்ஜி விளையாட்டில் மூழ்கிப் போயிருந்த குடும்பத்தலைவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட தாவடியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வந்துடைய குடும்பத்தலைவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இதன்படி,
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வாரங்களுக்குள் இரண்டாவது நபர் அலைபேசியில் இணையவழி போர் விளையாட்டில் ஈடுபட்டு உயிரை மாய்த்துள்ளனர்.
“நேற்றிரவு படம் பார்த்துவிட்டு தூக்கத்துக்குச் சென்றோம்.
காலையில் எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கிலிட்டு சடலமாக காணப்பட்டார்.
எப்போதும் பப்ஜி விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார்.
வேறு பிரச்சினைகள் அவருக்கு இருக்கவில்லை” என்று மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மாத இறுதியில் இளவாலையைச் சேர்ந்த இளைஞன் இதேபோன்ற காரணத்தினால் உயிரை மாய்த்தார் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.