மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டிற்குள்!!
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அரசாங்கத்தினால் மாகாண ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் வர்த்தக நிலையங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளன.
அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன் அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதையும் தவிர்த்துள்ளனர்.
அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கு எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.