பனை மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நுங்குத் திருவிழா வவுனியாவில்!!
பனை மரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட நுங்குத் திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் இன்றையதினம்(21/05/2023) இடம்பெற்றது.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளைஞர்கள்,
யுவதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் பனம்பொருள் உற்பத்திப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டதுடன்
பண்டாரவன்னியன் புத்தகசாலையின் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.