2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும்….. பிரான்சின் பிரபல ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ்!!
பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ் வரும் 2022ம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் மற்றும் அணுகுண்டுகளால் பல நாடுகள் முடிவுக்கு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தைப் பற்றிய நோஸ்ட்ராடாமஸ்(nostradamus) கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ள நிலையில், தற்போது 2022ம் ஆண்டு குறித்து இவர் கணித்துள்ள கணிப்பு பலரையும் அதிர வைத்துள்ளது.
உலகில் அணுகுண்டு வெடிக்கும்
நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் உலகின் தட்பவெப்ப நிலை மாறி பிரம்மாண்டமான பனிப்பாறைகள் முற்றிலும் உருகும்.
இதனால் உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும். கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணமடைவார்கள், எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும்.
3 நாட்களுக்கு உலகத்தை இருள் சூழும்
மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் இந்த ஆண்டில் பல நாடுகளுக்கு இடையே போர் நடப்பதுடன், ஏராளமானோர் இறக்கவும் நேரிடுமாம்.
அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும். அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்றுவிடும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது, நவீனத்துவத்தின் முடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும்.
சிறுகோள் பூமியுடன் மோதும்
மேலும் இந்த புதிய ஆண்டில் பெரிய வானியல் நிகழ்வு நிகழும். அடுத்த ஆண்டில், ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள் ஒன்று, மிக அதிக வேகத்தில் வந்து பூமியைத் தாக்கும்.
அந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும். அந்த சிறுகோளின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமி உருவாகும்.
எனவே, கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்.
மனிதகுலத்தின் மீதான AI தாக்குதல்
2022 ஆம் ஆண்டில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் மற்றும் ரோபோக்களே மனிதகுலத்திற்கு எதிரியாக மாறும் என்று நோஸ்ட்ராடாமஸின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரோபோக்கள் கட்டுப்பாடற்றதாக மாறி ஒட்டுமொத்த மனித இனத்தையும் பூமியில் இருந்து அழித்துவிடும்.