இந்தியாவிலிருந்து யாழிற்கு சட்ட விரோதமாக வந்த நபர்கள்!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வருகை தந்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வந்து தங்கியிருந்த நால்வர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தலுக்கு அமைய தனியான இடத்தில் சுய தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குரிய பி.சி.ஆர் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.  தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் முகாமில் வசித்து வந்த தாய், மகள், 2 பேரப்பிள்ளைகள் என 4 பேர் படகு மூலம் தாயகம் வந்து சேர்ந்துள்ளனர்.

(அ.அ.எண் 1719) P. சகாயராணி வயது 60, இவரது மகள் (அ.அ.எண் 1917) மேரி லவுரா வயது 35, இவரது பிள்ளைகள் கௌரி யல்றிசாந்த் வயது9, டிலான் லியோ நட் வயது 7 ஆகியோரே 10ம் திகதி இரவு புறப்பட்டு, நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை வந்தடைந்துள்ளனர் என்ற தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மேரி லவுராவின் கணவர் அருள் தீபன் பிரான்சில் இந்தியாவிலேயே உள்ளார். மேரிலவுரா ஏற்கனவே பிரான்ஸ் செல்வதற்கு சட்டவிரோதமாக கடவுச்சீட்டு தயார் செய்த முறைப்பாட்டில் இவருக்குப் பதிலாக இவரது கணவரின் தம்பி நிஷாந்தன் இன்னும் கோயம்பத்துர் மத்திய சிறையில் உள்ளார். இந்த நிலமையிலேயே இவர்கள் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளதாக தற்போது தமிழக செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *