இலங்கையிலுள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் பாதுகாப்பு அச்சுறுத்தலால்….. காலவரையறையின்றி மூடப்பட்டது!!

இலங்கையில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(15/02/2023) இரவு பதிவான பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவம் காரணமாகவே விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஆகவே,

அனைத்து விண்ணப்பதாரர்களும் IVS PVT LTD உடனான தங்கள் சந்திப்புக்களை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தேவைகள் அல்லது விசா விடயங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்புகொள்ள வேண்டுமாயின், 011 232 69 21 அல்லது 011 242 28 60 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *