இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் துவங்கியது
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் தளத்தை துவங்கி உள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆப்பிள் சாதனங்களை வாங்கிட முடியும். இத்துடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி சலுகைகளை வழங்கப்படுகிறது.
இதுவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்தபடி வாங்கிட முடியும்.
ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் 24 முதல் 72 மணி நேரங்களுக்கு டெலிவரி செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. எனினும், மேக் போன்ற சாதனங்கள் டெலிவரி ஆக ஒரு மாதம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் மாணவர்களுக்கு பிரத்யேக நிதி சலுகைகள் மற்றும் தவணை முறை வசதி உள்ளிட்டவை வழங்ப்படுகின்றன. ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர் சேவை மைய வசதியும் வழங்கப்படுகிறது. இதில் சேவை மைய அதிகாரி சாட் அல்லது அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர் சந்தேகங்களை பூர்த்தி செய்கின்றனர்.