Football மைதானத்தில் மின்னல் தாக்கி இறந்த வீரர்….. அதிர்ச்சியில் உறைந்த பார்வையாளர்கள் (காணொளி)!!

இந்தோனேஷியாவில் கால்பந்து வீரர் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த குறித்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தோனேஷியாவின் சுபாங்கைச் சேர்ந்த 34 வயதான நபரொருவர் மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்தில்

எஃப்சி பாண்டுங் மற்றும் எஃப்பிஐ சுபாங் இடையேயான கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இதன் போது,

மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக காத்திருந்த குறித்த வீரரை மின்னல் தாக்கியுள்ளது.

இதையடுத்து,

குறித்த இடத்திலேயே விழுந்த அவரை சக வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும்,

அவரை சோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக……

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *