இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அண்மைக் காலங்களாக சரிய தொடங்கியுள்ளது.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நெருங்கும் தினத்தில், தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது.
அந்த வகையில் சர்வதேச சந்தையில் இரண்டு தினங்களுக்கு பின்பு தங்கம் விலையானது, இன்று மீண்டும் சற்று சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
தற்போது அவுன்ஸூக்கு சுமார் இரண்டு டொலர்கள் குறைந்து, 1910.30 டொலர்களாக உள்ளது.
நேற்று 1911.90 டொலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1907.60 டொலர்களாக பதிவாகி உள்ளது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள்.
ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்.