இன்றும் இரண்டு மரணம் – உயர்ந்தது பலி எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219ஆக அதிகரித்துள்ளது.
60 வயதான ஆண்ணொருவரும், 78 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த நபர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக கோளாறு, இரத்தம் விஷமாகியமை உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அளவ்வ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், பின்னர் நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
நாரம்மல வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
நீரிழிவு உள்ளிட்ட நோய்களுடன் கொவிட் தொற்று ஏற்பட்டமையே உயிரிழப்புக்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.