வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற பாடல்களை மட்டுமே இனி இசைக்க வேண்டும்….. மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!!
மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் பிற மத விழாக்களில், வழிபாட்டுத் தலத்திற்கு ஏற்ற வகையிலான பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும் என புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சில பண்டிகைகளில் சமயச் சடங்குகளுக்குப் பொருந்தாத பாடல்கள் இசைக்கப்படுவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும்,
சமய விழாக்களை சுகாதார வழிகாட்டுதல்களின் படி நடத்த வேண்டும் எனவும் அமைச்சகம் தெரிவிக்கிறது.
வழிபாட்டுத் தலங்களில் பக்திப் பாடல்களை ஊக்குவிக்கும் போதும், ஊர்வலம் நடத்தும் போதும், தற்போது உள்ள பாடல்களைப் பயன்படுத்தாமல் சமயப் பின்னணி கொண்ட மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்ற பாடல்களை மட்டும் பயன்படுத்தி வழிபாட்டுத் தலத்தின் புனிதத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.