262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்ட இந்தியாவின் முதல் உள்ளுர் தயாரிப்பு விமானம் தாங்கி கப்பல் “ஐஎன்எஸ் விக்ராந்த்”….. பிரதமர் மோடியினால் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ (INS vikranth) என்ற கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(02/09/2022) நாட்டுக்கு கையளித்துள்ளார்.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வைத்து பிரதமர் மோடியால் இந்த கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,
இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
கடற்படை கொடியில்,
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்பட்டு புதிய வெள்ளைக் கொடியில், தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் அதி நவீன தானியங்கி அம்சங்களைக் கொண்டு 20,000 கோடி ரூபாய் செலவில்,
கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் “ஐஎன்எஸ் விக்ராந்த்”(INS vikranth) ஆகும்.
இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது,
எடுத்துக்காட்டாக இருப்பது “ஐஎன்எஸ் விக்ராந்த்“(INS vikranth) கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
“ஐஎன்எஸ் விக்ராந்த்“(INS vikranth) போர்க்கப்பல் அல்ல, மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்டது.
தனித்துவமானது,
சிறப்பானது.
உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது.
இந்தியாவின் புதிய நம்பிக்கையை நிரப்பியுள்ளது, நாட்டுக்கு புதிய நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.
விகாராந்த் கப்பலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பானது,
வலிமையானது, உள்நாட்டு தயாரிப்பில் உருவானது.
உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு.
கப்பலில் பயன்படுத்தப்பட்ட உருக்குப் பொருட்கள் உள்நாட்டைச் சேர்ந்தவை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது இந்தியாவின் 2–வது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும்.
ஏற்கனவே,
இந்தியாவிடம் உள்ள விமானந்தாங்கி போர்க்கப்பலான “ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா“(INS Vikramaditya) ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டதாகும்.
தற்போது உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான முக்கிய திறனை இந்தியா கொண்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்தியாவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் உள் நிறுவனம் மற்றும் “கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்“(Cochin Shipyard) என்ற பொதுத்துறை நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.
262 மீட்டர் நீளம் மற்றும் 62 மீட்டர் அகலம் கொண்ட விக்ராந்த் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பின்னர் 43000 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
28 நாடிகள் வேகத்தில், 7500 கடல் மைல்கள் தூரம் செல்லக் கூடியது.
இது சுமார் 2,200 பெட்டிகளைக் கொண்டுள்ளது.
சுமார் 1,600 பணியாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெண் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உள்ளன.
பிசியோதெரபி கிளினிக்,
ஐசியூ, ஆய்வகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளிட்ட சமீபத்திய உபகரணங்களுடன் கூடிய முழு அளவிலான மருத்துவ வளாகத்தையும் கப்பல் கொண்டுள்ளது.
இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக உலங்குவானுர்திகள் , இலகுரக போர் விமானங்கள், தவிர MiG-29K போர் விமானங்கள், Kamov-31 மற்றும் MH-60R மல்டி-ரோல் உலங்குவானுர்திகளை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் 7 மடங்கு பெரியதாகும்.
கப்பலில் உள்ள நான்கு என்ஜின்களும் சேர்ந்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகின்றன.
அது ஒரு நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானதாகும்.
சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த போர்க்கப்பல் உருவாகி உள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 நாட்களுக்கு நடைபெற்றது.
பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டாலும்,
அடுத்த ஆண்டு இறுதியில் தான் இது முழுமையாக இயக்கத்திற்கு வரும்.
உள்நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிப்பதற்கான சாத்தியத்தை நிஜமாக்கியதன் மூலம் ‘ஐஎன்எஸ் விக்கிராந்த்‘ இந்திய கடற்படையில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது.
விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம்.
அவ்வாறான ஒரு நிலையைக் கொண்டு இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.