டொலர் பிரச்சினைக்கான அமைச்சர்களின் தீர்வு!!
டொலர் பிரச்சினைக்குத் தீர்வைபெற, சர்வதேச நாணய நிதியத்திடமாவது (International Monetary Fund) கடன் பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர்கள் சிலர் அமைச்சரவை கூட்டத்தின்போது கோரியுள்ளனர்.
நேற்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடானது எரிபொருள் இறக்குமதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Kamanpila) கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொண்டால் அவர்களது நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய நிலைமை உருவாகும் என வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara), பந்துல குணவர்தன (Bandula Gunawardena) உள்ளிட்ட அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.