பெரும் மந்தகதியில் செல்லும் உலகப் பொருளாதாரம்….. IMF கடும் எச்சரிக்கை!!
வளர்ச்சி அடைந்துவரும் உலக நாடுகள் எதிர்வரும் நாட்களில் கடினமான தருணங்களை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
நிலுவையாக உள்ள கடன்களை செலுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் பாரிய இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பானது சிறிலங்காவை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு தயாராகிவரும் அதேவேளை,
ஒமைக்ரோன் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்காரணமாக,
வளர்ச்சி அடைந்துவரும் பொருளாதாரத்தை கொண்ட உலக நாடுகள் கடினமான நிலைமையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் என்பது டொலர் மதிப்பிலான கடன்கள் காணப்படும் சில வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு நிதி செலவுகளை அதிகரிக்க வழி வகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நாடுகள் ஏற்கனவே உலகப் பொருளாதார மீட்சியில் பின்தங்கியுள்ளதாகவும்,
>
இதனால் மேலதிக செலவினங்களை உள்வாங்கும் திறன் அந்த நாடுகளுக்கு குறைவாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் “அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் பாதிப்புகளின் அடிப்படையில் நெருக்கடியை எதிர்கொள்வதற்கான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார கணிப்பீடுகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ள சர்வதேச நாணய நிதியமானது, தொற்றுநோயின் அழிவுகளிலிருந்து உலகப் பொருளாதார மீட்சியானது இவ்வாண்டும் அடுத்த ஆண்டும் நீடிக்கும் எனக் கூறியுள்ளது.
எனினும்,
கொரோனா தொற்றின் ஒமைக்ரோன் மீளெழுச்சியானது, வளர்ச்சி தொடர்பான அபாயங்களை அதிகளவில் ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
>