34 வார சிசுவொன்றிற்கு தாயின் கருப்பைக்குள் சத்திர சிகிச்சை!!
தாயின் கருப்பைக்குள் கருவுற்ற சிசுவொன்றிற்கு முதல் தடவையாக சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
34 வார சிசுவொன்றிற்கே இவ்வாறு சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருப்பைக்குள் உள்ள சிசுவின் மூளையில் இரத்த ஓட்ட குழாயில் காணப்பட்ட தடங்கலை அடுத்து
சத்திர சிகிச்சை மூலம் அது குணமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிறுவர் வைத்தியசாலையொன்றில் அமெரிக்க வைத்திய குழுவொன்றினால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.