ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது எந்த நாட்டில் நடக்கும்? வெளியான முக்கிய தகவல்!!
ஒத்திவைக்கப்பட்ட 2021 ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் 2008 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
கடந்த ஆண்டுகளில் சிலமுறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் தொடர் நடைபெற்றிருக்கிறது. அதேப்போல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாகவும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் நடந்தது.
ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இம்முறை தான் கொரோனா காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் எப்போது எங்கு நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 18 அல்லது 19ம் திகதி தொடங்கி அக்டோபர் 9 அல்லது 10ம் திகதி இறுதிப்போட்டி நடத்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.
25 நாட்களில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 14ம் திகதி-யுடன் முடிவுடைய உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட பிரித்தானியாவிலிருந்து நேராக இந்திய வீரர்கள் ஐக்கிய அமீரகம் பயணிப்பார்கள் என கூறப்படுகிறது.