ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துவருவோருக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது இந்த விவகாரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் கடற்படையை ஈரானை நோக்கி ட்ரம்ப் அனுப்பியுள்ளார் இதனால் மத்திய கிழக்கில் கடுமையான போர்பதற்றம் நீடித்து வருகின்றது இந்த பதற்றத்தை தணிக்க துருக்கி முன்வந்துள்ளது எனவே அந்த நாட்டுக்கு ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி நேற்று சென்றிருந்தார் அங்கே துருக்கி அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர் ,பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில் ‘நேர்மையான மற்றும் சமநிலையிலான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் போருக்கு நாங்கள் தயாராக இல்லை அனால் பேச்சுவார்த்தைக்கான வடிவம் ,இடம் மற்றும் அம்சங்கள் பொறுத்தே அதற்கான ஏட்பாடுகள் அமைய வேண்டும்’ என தெரிவித்துள்ளார் அதே நேரம் அமெரிக்கர்களை பேச்சுவார்த்தையாக சந்திக்கும் இடம் திட்டம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அப்போது துருக்கி வெளியுறவு மந்திரி ஹகன் பிடன் கூறுகையில் ‘ பிரச்சினைக்ளை தீர்க்க ராணுவ நடவடிக்கையை நடுவதை நங்கள் ஏதிர்க்கின்றோம்’ அது பயன்தராது பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மட்டுமே நங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
