கொட்டி தீர்க்க போகும் கனமழையா – சுட்டெரிக்க போகும் வெயிலா….. வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை,
தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் போது சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலே உள்ளது.
அதன்படி,
இன்றையதினம்(08/04/2024) நண்பகல் 12:12 மணிக்கு மாரவில, பொடுஹெர, குருகத்தே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வாரப்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுத்துள்ளாது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,
மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.