முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!
நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சர் சன்னா ஜயசுமண மற்றும் டிஜி சுகாதார சேவைகள், டாக்டர் அசேலா குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நேற்றைய கூட்டத்தில், வார இறுதிக்குள் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களால் முறையான கோரிக்கை எதுவும் இதுவரை ஒப்படைக்கப்படாததால், நாட்டை முடக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.