யாழில் மின்னல் தாக்கி SLTBசாரதி மரணம்!!

யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் வயது 41 என்பவரே உயிரிழந்தார். வயலில் உழவுத் தொழிலில்  ஈடுபட்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அச்சுவேலி வடக்கை சொந்த இடமாகவும் உடுப்பிட்டியை வதிவிடாகவும் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் இறப்பு தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் அப்பகுதி சுகாதாரப் பிரிவினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *