யாழ் மாவட்டத்தில் இனி கிராமத்துக்கு இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராமத்துக்கு இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை நியமித்து பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பக் கூட்டம் யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மூத்த பிரதிப் காவல்துறைமா அதிபர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர் .
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவிலும் இரண்டுகாவல்துறை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்
அவர்கள் இருவரும் அந்தக் கிராம சேவையாளர் பிரிவில் வாரத்தில் மூன்று நாள்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.
இந்நிலையில் கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிதல் பிணக்குகளைத் தீர்த்துவைத்தல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அந்தக் கிராமத்துக்கு கடமைக்கு அமர்த்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்னெடுப்பார்கள்.