யாழில் மீன் வியாபாரம் செய்த அறுவர் கைது!!
யாழ்ப்பாணம் – குளப்பிட்டி சந்திக்கு அருகில் மீன் வியாபாரம் செய்த ஆறு பேர் பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையகளை மீறீய குற்றச்சாட்டில் கைது யாழ்ப்பாணம் பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த முக்கிய அமைப்பொன்றின் தரப்பினர் 30ற்கும் அதிகமானோரை அழைத்து கூட்டம் கூட்டியவர்கள் வெறும் எச்சரிக்கை மாத்திரம் செய்து விடுவிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் மக்களை ஒன்று திரட்டி மீன் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் ஆறு மீன் வியாபாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் வியாபாரத்துக்கென வைத்திருந்த மீன்கள் மற்றும் வியாபார பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபையினால் ஏற்கனவே இவ்வாறான வியாபார நடவடிக்கைகளை மக்களை ஒன்று திரட்டி செய்ய வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் தொடர்ச்சியாக குறித்த பகுதியில் வியாபாரம் மேற்கொண்ட நிலையில் இன்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய பயணத்தடை காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.