யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய….. நான்கு உணவகங்களுக்கு அரக்கு முத்திரை(Seal)!!
யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் அரக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் வண்ணார் பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஏற்கனவே,
பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் 03 உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நிலையில் பொது சுகாதார பரிசோதகரிடம் சிக்கியுள்ளன.
இதனையடுத்து,
03 உணவகங்கள், மற்றும் வெதுப்பகம் என்பவற்றிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.