யாழில் இன்று முதல் முடக்கப்படும் பிரதேசம்- இராணுவத் தளபதி தெரிவிப்பு!!!
நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்ல, 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் உடன் நடைமுறையாகும் வகையில் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவின், வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கண்டி மாவட்டம் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுஹும்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின், விஹார லேன் விகார மாவத்தை கப்பர தேவாலய வீதி சுதுஹும்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின், அடுக்குமாடி குடியிருப்பு வளாக நடுவீதியின் ஒரு பகுதி, பொல் வத்த வீதியின் ஒரு பகுதி, கோவில் வீதியின் ஒரு பகுதி.
கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்த கிராமம் ஆகினவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.