யாழ் – புத்தூர் பகுதியில் கணவன், மனைவி இருவரும் பரிதாபகரமாக பலி!!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை ஒன்றினைக் கணவன் வெட்டியபோது தண்ணீர் இறைக்கும் மோட்டார் அருகிலே இருந்த மின்சார வயர் அறுந்துள்ளது.
அதனை சரிசெய்த பின்னர் மனைவி அதற்கு அருகில் உள்ள கிணற்று தொட்டியில் நீராடிய போது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதன்போது,
மனைவியைக் காப்பாற்றுவதற்காக கணவன் சென்ற நிலையில் இருவரும் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் உயிரிழந்தமை அயலவர்களுக்குத் தெரியாத நிலையில் பல்கழைக்கழகம் சென்று வீடு திரும்பிய அவர்களது மகள் பெற்றோரைக் காணாது தேடியபோதே கிணற்றுக்கு அருகில் சடலமாகக் கிடப்பதைக் கண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் கணவனுக்கு 59 வயது எனவும் மனைவிக்கு 55 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.