யாழ் – அராலியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார்சைக்கிள்கள்….. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்றைய தினம்(29/06/2023) வியாழக்கிழமை மதியம்

இரண்டு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் ( 37 வயது) மற்றும் அவருடன் பயணித்த வாகனங்கள் பழுது பார்க்கும் (Mechanic) அராலி மத்தியை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (29 வயது) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *