யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட 4 மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) – நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களுடன் குழப்பத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் உட்பட நான்கு மாணவர்களுக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிலும் திரைப்பட திரையிடல்கள் நடைபெறுகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவுக்கு வருகை தந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே குறித்த மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழாவிலும், கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்ற திரையிடலை பார்வையிட காற்சட்டைகளுடன் வந்தவர்களை பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுத்திருந்தனர்.
அதனால் திரைப்படத்தை பார்வையிட வந்தவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு, அவற்றை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமையால், அவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.